expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): நண்பர்கள் கவிதை
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label நண்பர்கள் கவிதை. Show all posts
Showing posts with label நண்பர்கள் கவிதை. Show all posts

Saturday, 25 August 2012

நண்பன்


நண்பனோடு போட்டி போடு
தோல்விகள் வந்தால் நண்பன் ஏற்றுக்கொள்வான்,
வெற்றிகள் வந்தால் உனக்கே தந்துவிடுவான்...!

நண்பனோடு மனம்விட்டு பேசு
கவலைகள் என்றால் அவனும் அழுதுகொள்வான்,
மகிழ்ச்சி என்றால் அனைவரையும் சிரிக்கவைப்பான்...!

நண்பனோடு சேர்ந்து உறங்கு
பகலிலும் உன்னை உறங்கவைப்பான்,
இரவில் உனக்காக விழித்திருப்பான்...!

நண்பனோடு கை கோர்த்து செல்
உனக்காக வழியும் காட்டுவான்,
உனக்காக வழியும் விடுவான்...!

நண்பனோடு சேர்ந்து வாழ்
உனக்காக வாழவும் செய்வான்,
உனக்காக சாகவும் துணிவான்...!



நட்பை நேசி..







வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி... ஆனால்,
சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால்
நட்பை நேசி.....


உள்ளம்







உன் உள்ளம் நேசிப்பதை
நீ மறந்து விடலாம்... ஆனால்,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது..!
நட்பை நேசிக்கும் ஓர் உள்ளம்


நல்ல நட்பு




'ஆயிரம் கோடி நட்சத்திரம் விண்ணில் இருந்தாலும் வானத்துக்கு அழகு நிலவு தான்...............
ஆனால் ஆயிரம் உறவு மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு நல்ல நட்பு தான்''.............


நட்பின் நினைவுகளுடன் …



நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்
நினைவுகள் நம்மை
விட்டு பிரிந்து செல்வதில்லை … !!!
என்றும் உங்கள் நட்பின் நினைவுகளுடன்
'''''




Wednesday, 15 August 2012

முகம்





முகம் பார்த்து
முகவரி தெரிந்து
முழுவதும் அறிந்து
முதிர்ந்தன சில நட்புகள்..


ஆயுள்



அறிமுகமே இல்லாது
அவலுடன் அருகமர்ந்து
அன்பால் அரவணைத்து
ஆயுள் வரை பயணிக்கும் சில நட்புகள்..


பழம்


பணத்தை பார்த்தவுடன்
பந்தத்தை உருவாக்கி
பழக்கத்தை உறவாக்கி
பழம்போல கனியும் சில நட்புகள்..


காலங்கள்


காலங்கள் பல கடந்தும்
கடல் தண்டி வாழ்ந்தாலும்
கஷ்டத்தில் கைகொடுத்து
கவலைகளை மறக்கவைக்கும் உண்மையான சில நட்புக்கள்..


நட்புக்கள்...


வேசத்தை விதைத்து
நேசத்தை இராண்டாக்காது- உண்மை
பாசத்தை படரவிடுங்கள்
நட்பெனும் புனித தாடகத்தில் ...

நெஞ்சத்தை கல்ளாகி
வஞ்சத்தை சொல்லாகி
எண்ணத்தை புன்னாக்கி
பாசத்தை துண்டாக்கும் சில நட்புக்கள்...



நட்பு





முறை வைத்து
செப்ப முடியாத
நட்பு என்ற உறவுக்கு
நாள்தோறும்
நண்பனின் பாசத்துக்கு
நன்றிக்கடன்கள் ஏராளம்.


நண்பன் பாசம்




யார் சொல்லியும் கேட்பதில்லை
குறை கூறி ஏற்பதில்லை
எவர் சொல்லியும்
நட்பு தொடுத்ததில்லை
நண்பன் பாசம் குடிகொண்டது
தெரியவில்லை



நட்பு


....:::::ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாத நட்பும்::::.....
.....:::::
உரிமையை எடுத்துக்கொள்ளாத காதலும்:::::.....
.....:::::
உண்மையான உறவாக இருக்க முடியாது:::::.....


நண்பன்




நண்பனை விட ஒருத்தன் Lifeக்கு தேவையே இல்லையடா
நற்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா
நம் வெற்றிகள் குவியுமடா...




Tuesday, 14 August 2012

நட்பு



கண்ணீரை துடைக்கக் ஆண்டவன் படைத்த 
அற்புத பொக்கிஷம்தான் நட்பு ! 
உயிருக்காக யோசிக்காமல் உயிரைக் கொடுக்கும் நட்பு ! 
நமது இன்பம் துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் புனித உறவு நட்பு ! 
ஜாதிகளைக் மதங்களைக் அழிக்க இறைவனால் படைக்கப்பட்டதுதான் நட்பு !...


நட்பு

சண்டைகளுக்குப் பின்னும்
நான் தோள் சாயும்
இன்னொரு அன்னையாய்
உன் நட்பு


Sunday, 29 July 2012

நட்பு


•• நட்பின் ஞாபகங்கள் மனதில் 
செதுக்கபடுபவை
மறக்க முயற்சி செய்யலாம்
ஆனால் முடியாது ••


Monday, 18 June 2012

நண்பன்


எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக
 


Friday, 1 June 2012

நட்பு


காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட..
நட்பே...சிறந்தது..!

நட்பு


உடன் பிறந்த உறவுகள் கைவிட்டாலும்
உரியவள் கை விட்டாலும்
என்றும் கைதாங்கி நிற்பதென் நட்பே..! -

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்