expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> August 2012 ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Monday, 27 August 2012

உன் நினைவுகள்


உணர்வுகள் இறந்தாலும்
தூக்கம் இரவுகளை மறந்தாலும்
இறக்காமல் வாழுது என்
கண்களில் கண்ணீரோடு
உன் நினைவுகள்

GirL



இனி பேச மாட்டேன் என்று கூறி
பேசிவருகிறேன்
இனி பார்க்க மாட்டேன் என சொல்லி
பார்த்து வருகிறேன்
பொய்யாய் கோவம் கொண்டு
தள்ளி செல்கிறேன்..
ஒரு நாள் ஏனும்
உன்னுடன் பேசாதிருக்க நினைத்து
தோற்று போகிறேன்...
என்னை அமைதியாய் பார்த்து
ஏளனமாய் நீ சிரிக்கிறாயே
உன்னால் முடியாதடி என்றா??


நீ வேண்டும்



காதல் வேண்டும் என்றால்
இன்னொரு பெண்ணை நாடி இருப்பேன்
நீ வேண்டும் என்பதால்
உனக்காகவே காத்திருக்கின்றேன்..

ஒரு தலைக் காதல்



என்னுடையது ஒரு தலைக் காதலா? ” 
நீ இல்லை “ என்று நீ சொல்லும் வரை 
என் கண்ணில் அதே காதலுடன் நான் காத்திருப்பேன் 
ஒரு தலைக் காதலுடன்

நினைவுகள்


சத்தியமாய் சொல்கிறேன் என்னிடம்
உன் நினைவுகள் இல்லை 
உன் நினைவுகளாகதான்
நான் இருக்கிறேன்

Sunday, 26 August 2012

ஈரம்



புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்! ♥ ♥

நினைவு



நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன….


இதயம்


உன் காலில் கொலுசு இல்லையென்றாலும்
நீ நடக்கையில் சத்தம் வரும்
என் இதயம் அங்கேயும்
உனக்காக துடிப்பதால் !...



வேதனை


எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்...! ♥ ♥

முத்தம்


நாம் கடற்கரையில்
பேசிச்சென்ற பிறகு
மிச்சமிருக்கிறது....,

ஆயிரம் காதல் வார்த்தைகள்,
கட்டியணைக்கையில் நடுவே
நின்ற தேக்கரண்டி காற்று ,
சில கூந்தல் மயிர்கள்,
மற்றும்
எங்கே செல்வது என்று தெரியாமல்
ஒரு முத்தமும் !!
அதில் இருக்கும் காதலும் !! 


கண்ணீர்


உன் புன்னகையை விட 
உன் கோபத்தை அதிகம் நேசிக்கிறேன் .
என்னை கொலை செய்ய
உன் ஒரு துளி கண்ணீர் போதும் ...!

கடவுள்


தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்

என் ஒவ்வொரு
துணிவிலும் நீ..



நீ .


இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவள் நீ .

தொலைந்த நாய்குட்டி


தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு ,

உன்னால் தொலைந்த
என்னை தேடிப்பார்க்கும்
எண்ணம்கூடவா இல்லை .

மௌனக்கதறல்கள்


அழகே !
உன் செவியில் கேட்கிறதா?
உன்விரல் பட துடிக்கும் பூக்களின்
மௌனக்கதறல்கள் ....♥ ♥ ♥



நேரம்


நீ இருக்கும் போது,
நேரம் போதவில்லை.
நீ இல்லாத போது,
நேரம் போகவில்லை.....!!



காதலுக்கு மரியாதை


அன்று நீ
புகைப்பதை நிறுத்தச்சொல்லி
என்னுடன் சண்டை பிடித்தாயே
உடனே நானதை நிறுத்தினேனே,
அது உனக்கு உணர்த்தியிருக்கும்

நான் செய்தது
காதலுக்கு மரியாதை என்று.


காதல்


காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது ! ....

உடல்


••► உடலால் மட்டும் 
பிரிந்து இருக்கும் உன்னை 
என்னால் மறக்க முடியவில்லை 
நினைத்து கொண்டே இருப்பதால் ◄••

கருவறை



கருவறை சுமந்து
உன் துயர் தீர்த்து
புவிதனில் தவழ விட்டு
பரலோகம் நீ போனாய்...
தலைபிள்ளையா நானும்
தரணியில் உதத்தால்
உன் பொறுமையின் வடிவில்
குடும்பம் எனும்
சுமை சுமக்கிறேன்
தாயாய் நானும்


Saturday, 25 August 2012

அழியச் செல்வம்


தெய்வம் வரமாகத்தந்த தெய்வம் நீ அம்மா
நிலை இல்லா உலகில் அழியச் செல்வம் நீ அம்மா....

தாயின் கருவறை''



உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
''
தாயின் கருவறை''



எவரும் இல்லை !!!!







உன்னை எண்ணி கவிதை எழுத என்னைப்போல் ஆயிரம் பேர் இருக்கலாம்...
ஆனால் என்னைப்போல் உன்னை காதலிக்க எவரும் இல்லை !!!!!


நீ வேண்டும்





•• எனக்கு மட்டுமே நீ வேண்டும்
நீ இல்லையென்றால்
இறுதியென்பது எனக்கு
இப்போதே வேண்டும் ••


உன்னை மறக்கத்தெரியாது



•• எனக்கு பிடிக்காத
ஒன்றை நினைக்கத்தெரியாது,
பிடித்த உன்னை மறக்கத்தெரியாது ••




மெழுகு வர்த்தி!


நெருப்பு
எரித்துக் கொண்டு
இருக்கும்
மெழுகு வர்த்தி!

என்ன செய்வது
என்று தெரியாமல்
இன்னமும்
எரிந்து கொண்டு!

எண்ணையாய்
வழிந்த
கண்ணீர் முத்துக்களும்
கடைசியில் மிஞ்சவில்லை!

கம்பீரமாய் நின்ற
திரி கூட
காப்பாற்ற வில்லை
மெழுகின் நம்பிக்கையை!

கதவை திறந்ததும்
காற்று
பறந்து வந்து
நெருப்பை அணைத்தது!

கருத்த புகை
தான்
காற்றின் கருணைக்கு
கிடைத்த பரிசு!


வாடும் பூ



பின்பு என்னை நினைத்து இவள் வாட வேண்டும் என்றுதான் அன்று வாடும் பூவை எனக்கு பரிசளிதாயோ ••



வெற்றி தோல்வி


ஆயிரம் அம்புகள்
துளைக்கும் தோல்விகள்
தாங்கும் தேகம்
துடிக்கும் வேதனையில்

விருப்ப மரணம்
விதி என்பது
பிதாமகர் பாத்திரம்
படிப்பிக்கும் பாடம்!

வெற்றி தோல்வி
ஒருவன்
இறப்பை அறிவிக்கும்
அருகதை அற்றது!



நண்பன்


நண்பனோடு போட்டி போடு
தோல்விகள் வந்தால் நண்பன் ஏற்றுக்கொள்வான்,
வெற்றிகள் வந்தால் உனக்கே தந்துவிடுவான்...!

நண்பனோடு மனம்விட்டு பேசு
கவலைகள் என்றால் அவனும் அழுதுகொள்வான்,
மகிழ்ச்சி என்றால் அனைவரையும் சிரிக்கவைப்பான்...!

நண்பனோடு சேர்ந்து உறங்கு
பகலிலும் உன்னை உறங்கவைப்பான்,
இரவில் உனக்காக விழித்திருப்பான்...!

நண்பனோடு கை கோர்த்து செல்
உனக்காக வழியும் காட்டுவான்,
உனக்காக வழியும் விடுவான்...!

நண்பனோடு சேர்ந்து வாழ்
உனக்காக வாழவும் செய்வான்,
உனக்காக சாகவும் துணிவான்...!



உண்மையான அன்பு




உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க
முடியாது ...அந்த அன்புக்கு உரியவர்கள் மட்டுமே
அதை உணர முடியும் ... இதை தான் நான் எதிர்பாக்கிறன் 
என் வாழ்க்கையில்..


உன்னை மறவேன்

\



நீ என்னை மறந்தாலும் நான்கரைந்து செல்லும் நிமிடங்களிலும்
உன் நினைவுகளையே தினமும் உன்னை மறவேன்


வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்