Thursday, 31 May 2012
Wednesday, 30 May 2012
Monday, 28 May 2012
முள்ளங்கி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது. முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது. முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
அண்ணா நூற்றாண்டு நூலகம்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். உலகத் தரத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் ஆகும். பத்து லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் இங்கு உள்ளன . அதி நவீன நூல்கள் தேடும் வசதியும் , நூலகம் முழுவதும் குளிர் சாதன வசதியும் இங்கு உள்ளது. வாகனங்கள் நிற்க கட்டிடம் சுற்றியும் நிறைய இடம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை குடும்பமே படிக்கும் விதமாக அத்தனை நூல்களும் இங்கு உள்ளது. பணம் கொடுத்து வாங்க முடியாத விலை உயர்ந்த நூல்கள் முதல் , எளிதில் சந்தையில் கிடைக்காத அரிய வகை நூல்கள் வரை இங்கு உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பாடம் தொடர்புடைய நூல்களும் உண்டு. கண் பார்வை இல்லாதவர் கூட படிக்கும் படி ப்ரெயில் முறை நூல்கள் கூட இங்கு இருக்கிறது என்பது சிறப்பு. அத்தனையும் இலவசம்.
ஆட்சி மாறியதும் இந்த அருமையான நூல்களை கொண்ட இந்த நூலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எண்ணியுள்ளது வருத்தமளிக்கிறது . அதனால் இந்த நூலகத்திற்கு தேவையான வசதிகள் அரசு செய்வதில்லை. உறுப்பினர் அட்டை கூட வழங்கவில்லை. புதிய நூல்களை சேர்பதில்லை . இதற்கு மூடு விழா காணவேண்டும் என்பது தான் இன்றைய அரசின் நோக்கமாக உள்ளது.
அரசை மட்டுமே நாம் குறை கூற முடியாது . நாமும் ஒரு காரணம் தான். நாம் இந்த நூலகத்தை முறையாக பயன் படுத்துவதில்லை என்பதும் உண்மை. தமிழர்கள் , தங்கள் மொழி , பண்பாடு, வரலாறு , அரசியல், இலக்கியம் , ஈழ வரலாறு போன்ற எந்த விடையங்களையும் முறையாக படிப்பதில்லை. இது சம்பத்தப்பட்ட பல ஆயிரம் நூல்கள் இங்கு உள்ளது . தேசிய தலைவர் பிரபாகரன் பற்றியும் , இந்திய அரசின் துரோகங்களை பற்றியும் , திமுக அதிமுக அரசின் அலட்சிய போக்கை பற்றியும் இங்கு ஏராளமான நூல்கள் உள்ளன. இந்த நூல்களையெல்லாம் தமிழர்கள் படிக்க வேண்டும் , படித்து பயன்பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.
பயன் இல்லாத சினிமா , கிரிக்கெட் போன்ற களிப்புகளுக்கு செலவு செய்யும் நேரத்தில் , பெரியார் எழுதிய நூல்கள் , புரட்சி நூல்கள், தமிழர்கள் அறிவியல், மருத்துவம் , இசை , இலக்கியங்கள் போன்ற எண்ணற்ற , சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான பல நூல்களை படித்து நம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் . சென்னையில் உள்ள தமிழர்கள் இங்கு ஒரு நாள் முழுவதும் இருந்து பல அரிய தகவல்களை பெற வேண்டும் . வெளியூரில் இருப்பவர்களும் ஒரு நாள் இதற்காகவே சென்னைக்கு வந்து போகலாம். உங்களிடம் உள்ள நூல்களையும் இந்த நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்கலாம்.
இப்படி தொடர்ந்து நாம் பெருமளவில் இந்த நூலகத்தை பயன்படுத்தினால் அரசு இதற்கு மூடு விழா கொண்டாட நினைக்காது. மூடவும் முடியாது. அதனால் தோழர்களே உங்கள் பொன்னான நேரத்தை இந்த நூலகத்தில் செலவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . இதை மற்றவர்க்கும் பகிருங்க
Sunday, 27 May 2012
Saturday, 26 May 2012
வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.



02:04
ASWIN GEORGE

































.jpg)














