expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> June 2012 ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Saturday, 30 June 2012

LOVE


♥...நீ விரும்பும் இதயம் உன்னிடம்...♥
♥...நிறைய எதிர்பார்க்கும் ஆனால்...♥
♥...உன்னை விரும்பும் இதயம்...♥
♥...உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்...♥

விழி



♥...என் விழியில் வழியும் நீர்...♥
♥...உன் பிரிவினால் அல்ல...♥
♥...நீ வேண்டாம் என்று...♥
♥...விட்டு சென்ற பின்னும்...♥
♥...என்னைத் துரத்தும்...♥
♥...உன் நினைவினால்.

இன்பம்..


நீ எனக்காக பேசிய...♥
♥...வார்த்தைகளும்...♥
♥...நான் உனக்காக தொலைத்த...♥
♥...நேரங்களையும்...♥
♥...இணைத்து இன்பம்...♥
♥...பெறுகின்றேன்

அன்பு

]

முகம் பார்த்து வந்த அன்பு முறிந்து விடும்...♥
♥...பணம் பார்த்து வந்த அன்பு பறந்து விடும்...♥
♥...உள்ளம் பார்த்து வந்த அன்பு உயிர் வரை நிலைத்திருக்கும்

GOOD BYE


► என் வரிகளால் இனி உன்னைக்
காயப்படுத்த மாட்டேன்
நினைவுகளை என்னில் புதைத்துக்கொண்டு
வைக்கின்றேன் இதற்கொரு முற்றுப்புள்ளி. ◄••
♥ என்றும் உன் நினைவுகளுடன் விடை பெறும் நான்


LOVE


நீ என்னை, என் செய்தாய் என நான் அறியேன்...♥
♥...நீ என் அருகில் இருக்கும் போது மகிழ்விக்கிறாய்...♥
♥...என்னில் இருந்து விலகி செல்லும் போதெல்லாம்...♥
♥...அழவைக்கிறாய்.

NICE LINES

'


♥...உன் மீது நான் வைத்த அன்பினால்...♥
♥...உன்னை சிரிக்க வைக்க பலமுறை...♥
♥...நான் அழுகின்றேன்...♥

LOVE

''


என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை...♥
♥...என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்...♥
♥...இன்று உன்னை பார்த்தவுடன்...♥
♥...என்னை தோற்றுவிட்டு

கல்லறை




மறக்காமல் என் கல்லறைக்கு
ஒரு சன்னல் வைத்துவிடுங்கள்...
ஒருவேளை 
நான் இறந்த சந்தோஷத்தில்
என்னவள் அங்கே வரக்கூடும்

கண்ணீர்


அழுகின்ற உரிமையை...
என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்
என் கண்களுக்கு கொடுக்கவில்லை!
அதனால்தான்!
நான் அழுவதை...
என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...


காயம்


சற்று விலகிப்போ பெண்ணே!
நீ உடைத்த என் 
இதயத்தின் துண்டுகள்
உன் கால்களில் குத்தி விடலாம்
என் இதயம் கண்ட காயம்
உன் கால்களில் வேண்டாம்


நீ



நீ எவனுக்கோ சொந்தமானவள் என்று 
தெரிந்தும் - என்னை அறியாமலே
என் கவிதைகளை உனக்கு 
சொந்தமாக்கிக்கொண்டிருக்கின்றேன்

அன்பே



கொல்லாதே அன்பே 
விலகி விலகி சென்றாலும் 
விரட்டுகிறது உன் நினைவுகள்.

LOVE


 உயிராய் நேசித்த காதலை 
உதறி விட நினைக்கிறாயே 
உருகி நான் போனலும் 
உன் மீது நான் கொண்டகாதல் 
உருக்குலையாது என்பதை அறியாமல்


இதய துடிப்பு


அவள்
என்னைவிட்டு சென்ற
தருணம்தான்
என்இதயத்தின் கடைசி
துடிப்பு என்று
அவளுக்கு தெரியவில்லை




உயிர்


உயிர் இருக்கும் வரை 
உன்னோடு இருக்க வேண்டும் 
என்பது என் 
ஆசை இல்லை,
உன்னோடு இருக்கும் 
வரை மட்டும் 
உயிர் இருந்தால் 
போதும்..




LOVE



நீ
பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்

நினைவு


உயிரோடு தான்
இருக்கிறேன்
உன் நினைவுகளால்
வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல் 

அலை


உன்னை பிரிந்த என்னை
அந்த கடல் கூட விரும்பவில்லை
தன் அலை கொண்டு
அழித்துச் செல்கிறது
தனியாய் நடந்த
என் காலடி தடங்களை...


இதயம்.


உன் மனதில்
நான் இல்லையென
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே
என் இதயம்.


காதல்


காதல்வலியை
விழிகள் தாங்கும்
ஆனால்
கண்ணீரின் வலியை
காதல் தாங்காது


LOVE



என்ன சொன்னாலும் கேட்பதில்லை
என் மனம்,
பைத்தியமாய் அலைகிறது
உன்னோடு வாழ...
உண்மையை உணர மறுக்கிறது,
உன்னை மட்டுமே நினைக்கிறது.


Tuesday, 26 June 2012

அன்பு


இந்த உலகில் விலை மதிப்பில்லாதது
"
அன்பு" தான்...
ஏனோ அது விலை இல்லாமல்
கிடைப்பதால் அதன் மதிப்பை யாரும்
உணர்வதில்லை 


Wednesday, 20 June 2012

சுண்டக்கா


சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

முத்தம்


எவ்வளவு விலகிப்போனாலும்,
எள்ளளவும் தணிவதில்லை
உன்மீது கொண்ட தாகம் ,
கற்பனையில் கந்தலாக்க
முயல்கிறேன் உன்னை!
இது சமயம் வந்துவிடாதே எதிரில்,
முடிந்தே போவாய் என் முத்தவெப்பத்தில்!

Tuesday, 19 June 2012

நீ


என்னை அடிக்காமல்,
அழ வைப்பது 
நீ மட்டும்தான்.
என்னை கயப்படுதாமல் 
வலிகள் தருவது 
நீ மட்டும்தான்.
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்.
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது
நீ மட்டும்தான்.
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!

வாழ்க்கை .

வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..
என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?
கனவுகள்
நிஜமாகவும் இல்லை..
காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..! 
வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை .



மௌனம்


உன்னை விட்டு 
பிரிய முடியாமல் தவிக்கும் 
என் தவிப்பை எப்போது 
நீ உணர்வாய்.?
நான் இறந்த பிறகேனும் 
என் அன்பு உனக்கு புரிந்திடுமா?
இல்லை அப்போதும் நீ
மௌனமாய் தான் இருப்பாயா?
காதல் என் வாழ்வில் தந்தது
வலிகளை மட்டுமே...
நீ தந்தாய் உன் அன்பின் பரிசாய்
வாழ் நாள் எல்லாம்
என் கண்ணில் கண்ணீரை...

சுமை

எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

கவிதை


ஒரு தூண்டிலோடு
அமர்ந்திருப்பதாகவே
தோற்றமாகிறது என் உருவம்
சில நேரம் வலைகளை
வீசுவது போலவும்
நானோ
மீன் குஞ்சுகள்
நீந்துவது பற்றிய
கவிதை ஒன்று
உருவாகும் கணத்திற்காக
காத்திருக்கிறேன்..

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்