expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): MEDICAL
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label MEDICAL. Show all posts
Showing posts with label MEDICAL. Show all posts

Thursday, 23 August 2012

எலுமிச்சை பழம்



எலுமிச்சை--பழங்களின் பயன்கள் !!!


காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.


Wednesday, 15 August 2012

மருதாணி



இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.
...

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.

படைகள்
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்





Wednesday, 20 June 2012

சுண்டக்கா


சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

Monday, 28 May 2012

முள்ளங்கி



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி


முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது. முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

Tuesday, 22 May 2012

சோற்றுநீர்



சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே....

இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிறது.

ஆற்றுநீர் வாதம் போக்கும்

அருவிநீர் பித்தம் போக்கும்

சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!

Sunday, 20 May 2012

வாய்ப்புண்



வாய்ப்புண் சரியாக பாட்டி வைத்தியம்
---------------------------------------------------------------------------

கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது. பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான். வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை பாலோ பண்ணுங்க

மஞ்சள்

எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.

நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

புதினா இலை

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.

வெந்தைய இலை

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.


வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்.



வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்