expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> மெழுகு வர்த்தி! ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Saturday, 25 August 2012

மெழுகு வர்த்தி!


நெருப்பு
எரித்துக் கொண்டு
இருக்கும்
மெழுகு வர்த்தி!

என்ன செய்வது
என்று தெரியாமல்
இன்னமும்
எரிந்து கொண்டு!

எண்ணையாய்
வழிந்த
கண்ணீர் முத்துக்களும்
கடைசியில் மிஞ்சவில்லை!

கம்பீரமாய் நின்ற
திரி கூட
காப்பாற்ற வில்லை
மெழுகின் நம்பிக்கையை!

கதவை திறந்ததும்
காற்று
பறந்து வந்து
நெருப்பை அணைத்தது!

கருத்த புகை
தான்
காற்றின் கருணைக்கு
கிடைத்த பரிசு!


0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்