expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): NEWS
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Wednesday, 15 August 2012

பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது


பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி? இலகுவாக தமிழில் எழுத ஒருவழி 

எம் சிந்தனைகளை, எண்ணங்களை, இணையத்தில் நம் தமிழ் மொழியிலே எழுதலாம் வாருங்கள். இணையத்தில் என்னதான் ஆங்கில மொழியில் நாம் எழுதினாலும். அதையே நம் எண்ணங்களை சொந்த மொழி தமிழில் எழுதும் போது அந்த உணர்வே தனிந்தான். எனவே எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்று எல்லா இடத்திலும் இணையத்திலும் வந்து விட்டது தமிழ் மொழி 

நாம் தான் அதை தேடி பயன் படுத்துவது இல்லை. 
எனவே நாம் தமிழர்கள்இணையதில் தமிழை பயன்படுத்துவோம் வாருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் 

இதை கிளிக் செய்து எழுதுங்கள்..http://www.google.com/transliterate/tamil இதை டவுன்லோட் பண்ணி இன்சால் பண்ணி கொண்டால் ,உங்க கணணியின் கிபோட்டில் நேரடியாவே தமிழில் எழுதலாம். அதற்கு நெட் தேவை இல்லை.. இன்சால் பண்ணாமல் தமிழில் எழுத நெட் தேவை .. முயற்சி செய்து பாருங்கள் ..

ஆனால் உங்கள் கணனியில் நீங்கள் Internet Explorer பாவிக்கின்றவர்களா இருந்தால். அதில் இந்த தமிழ் எழுத்து வராது எதில் எழுத முடியாது.. நீங்கள் Google Chrome இன்சால் பண்ணி கொள்ளுங்கள்.https://www.google.com/intl/en/chrome/browser/இதில்மட்டும்தான் தமிழை எழுத முடியும்.. நன்றி பகிர்ந்து கொள்ளுங்கள்


Sunday, 15 July 2012

ஆதி மனிதன்


ஆதி மனிதனின் முழுமையான முதல் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு!
Published: ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 15, 2012, 13:36 [IST]
Most Complete Pre Human Skeleton Discovered Scientists

லண்டன்: ஆதி மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடு இது என்றும் தெரிய வந்துள்ளது.

ஆதி மனிதன் ஒருவனின் எலும்புக் கூட முழுமையாக நமக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆதி மனிதர்களின் உடல் கூறு குறித்த புதிய பரிமாணத் தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள்தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டதே பெரும் சுவாரஸ்யமானதாகும். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ம் ஆண்டு இந்த எலும்புக்கூட கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.

அந்தப் பாறைப் பகுதி ஆய்வகத்திலேயே இருந்து வந்தது. அதில் என்ன இருக்கிறது என்பது கூட சரியாக அனுமாணிக்க முடியவில்லை. இந்தநிலையில் அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை ஆய்வக உதவியாளரான ஜஸ்டின் முகாங்கா பார்த்தார். இதை விஞ்ஞானிகளிடம் அவர் சொன்னார்.

இதையடுத்து அந்த பாறையை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்தப் பாறையில் ஒரு மனிதனின் எலும்புக் கூட பாசில் வடில் ஒட்டிய நிலையில் புதைந்திருந்தது தெரிய வந்தது.

இந்த மனிதனுக்கு நீண்ட கால்கள், கைகள் உள்ளன. மூளை சிறிதாக உள்ளது. முதல் வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இந்த ஆதி மனிதன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே இந்த மனிதன் குறித்த ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மனி
ன் இறந்தபோது அவனுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த எலும்புக் கூட கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனித குலத்தின் தொட்டில் என்றும் இப்பகுதி விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவண்ணம் உள்ளன. மனிதனின் தோற்றம் குறித் பல முக்கியத் தகவல்களும் இந்தப் பகுதியில் ஏற்கனவே கிடைத்துள்ளன.

தற்போது ஒரு முழுமையான ஆதி மனிதனின் எலும்புக் கூட கிடைத்திருப்பதால் இப்பகுதியில் மேலும் தீவிர சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Saturday, 14 July 2012

பெண்களை எளிதில் கவர வேண்டுமா?





ஒரு சில ஆண்களுக்கு மட்டும் எப்படி பெண் அமைகிறது என்று பெருமூச்சு விடுபவரா நீங்கள்? பெண்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று விரக்தி அடைந்து மற்ற நண்பர்களின் கதைகளை ஏக்கத்துடன் கேட்கும் நீங்களும் தன்னன்பிக்கையுடன் விரும்பிய பெண் உடன் நெருங்கி பழகலாம். இயற்கையாகவே ஆண்கள் என்றால் பெண்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்றாலும் மனதை கவரும் ஆண்களிடம்தான் பெண்கள் நெருங்கி பழகுவார்கள். பெண்கள் மனதை கவர எந்த விதமான தனி திறமையோ அழகோ தேவை இல்லை. ஆனால் சில உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டும்.

தன்னம்பிக்கையும் வலிமையும் கொண்ட ஆண்களைதான் பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண்கள் ஆண்களிடன் விரும்புவது ஆண்மை, கம்பீரம் இவற்றைதான்.

என்னை உனது பாய் பிரண்ட் ஆக்கிக்கொள்ள மாட்டாயா?” என்று கெஞ்சி கேட்கும் ஆண்களை பார்த்து பெண்கள் பரிதாபம்தான் படுவார்கள்

அதிகமான பேர் பார்த்து ரசிக்கும் அழகான பெண்கள் என்றால் அவளிடம் கண்டிப்பாக வழியகூடாது. இப்படிப்பட்ட பெண்களிடம் சரியான சந்தர்பத்தில் கோபப்படவேண்டும். அதிகமாக பார்த்து ஜொள்விடாமல் அவ்வப்போது கண்டுகொள்ளமல் விடவேண்டும்.

பெண்ணின் மீது உண்மையான அக்கறை காட்ட வேண்டும். அவள் உடல்நலம், மனநலம் பற்றி தேவைப்படும்போது கேட்கவேண்டும்.

தானாக போய் தேவை இல்லாத உதவிகளை செய்யாமல், தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.

நான் ரொம்ப அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டம் அடிக்க கூடாது. அலட்டுகிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

தேவைப்படும்போது சந்தேகங்கள், ஐடியாக்கள் கேட்டு அவர்களின் முக்கியதுவத்தை காட்டவேண்டும்.

அவர்கள் செயல்களை தேவைப்படும்போது பாராட்ட வேண்டும்.

பிறந்தநாள், நியூ இயர் போன்ற நல்ல சந்தர்பங்களில் தவறாமல் வாழ்த்து சொல்ல வேண்டும்.

போன், SMS, E-Mail இவற்றுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்க வேண்டும்.

நேரில் பேசுவதற்கு வந்தால், செய்து கொண்டிருக்கும் வேலையையோ அல்லது போனையோ நிறுத்தி அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும்.

பெண்கள் இயற்கையாகவே அதிகம் பேச விரும்புபவர்கள். ஒரு ஆணிடம் இன்று நாள் எப்படி இருந்ததுஎன்று கேட்டால் ஓகே, ஒரே போர் அல்லது ஒன்னும் ஸ்பெஷல் இல்லஇப்படி ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் வரும். ஆனால் பெண்கள், காலையில் பால்காரன் லேட்டாக வந்தது முதல் மாலை பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கவில்லை என்பதுவரை உள்ள புலம்பல்களையும் சந்தோசத்தையும் ஆர்வமாக சொல்வார்கள். கேர்ள் பிரண்ட் வேண்டும் என்பவர்கள் பெண்கள் பேசும்போது பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

அவர்கள் பேசும் போது நன்றாக கவனிக்க வேண்டும். அப்புறம் எப்பொழுதாவது அதே பேச்சு வரும்போது நான் கவனிக்கவில்லை, எனக்கு தெரியாது என்று சொதப்பிவிடகூடாது.

உண்மையாக இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு பிடிக்கும்.

ஆனால் அவர்கள் அழகை பற்றியோ அவர்களை எந்த அளவு விரும்புகிறீர்கள் என்பதை பற்றி, பொய் என்றாலும் நிறைய சொல்ல வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.

அறிவியல், கணக்கு, டெக்னாலஜி போன்ற விஷயங்களை பெண்கள் அதிகம் விரும்புவதில்லை. இவற்றை தவிர்த்து பெண்கள் விரும்பும் ஜோதிடம், நம்பிக்கைகள், பேண்டசி, மறு ஜென்மம் போன்ற விசயங்களை பேசுங்கள்.

பெண்களிடம் மிக முக்கியமாக ஒரு குணம் உண்டு. பெரும்பாலான அம்பிஆண்கள் இதனாலேயே சோர்ந்து போய் விடுவது உண்டு.பெண்களின் பாஷை எப்போதுமே எதிர்மறையானது. வேண்டும் என்றால் வேண்டாம் என்று அர்த்தம். வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். பாதுகாப்பு, வெட்கம், கூச்சம் போன்ற காரணங்களினால் பெண்கள் நேரடியாக எதையும் சொல்வதற்கு தயங்குவார்கள். பெண்கள் சொல்வதில் உள்ள உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ள பழகவேண்டும்.

ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணின் முன் கிண்டல் செய்யவோ தர குறைவாகவோ பேசக்கூடாது.

இயல்பான நகைச்சுவை பேச்சு பெண்களுக்கு பிடிக்கும். அடிக்கடி சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கோமாளியாக செயல்படக்கூடாது.

அநாவசியமாக மிக அருகில் செல்வதோ, தொட்டு பேசுவதோ கூடாது.

நாகரீகமான, சுத்தமான உடை அணிந்து நல்ல தோற்றத்துடன் இருக்க வேண்டும்.

கருப்பான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது மிக பெரிய முட்டாள்தனம்.

பெண்களுடன் பேசும்போது கூச்சம், பயம் இருக்க கூடாது. தைரியமும் ஓரளவு திமிரும் உள்ள ஆண்ககளைதான் பெண்களுக்கு பிடிக்கும்.

தேவை இல்லாமல் விவாதம் செய்ய கூடாது
அனாவசியமாக பேசியோ, போன் செய்தோ அடிக்கடி தொந்தரவு செய்ய கூடாது.

மற்றவர்களை பற்றி பேசும் போது புறம் பேசாமல் மதிப்பும் கண்ணியமும் காட்ட வேண்டும்.

பெண்கள் மிகவும் பொறாமை குணம் மற்றும் உடமைகுனம் (Possessiveness) உள்ளவர்கள். அதனால் மற்ற பெண்களை புகழ்ந்தோ, அதிகம் பாராட்டியோ பேச கூடாது. எனக்கு நிறைய கேர்ள் பிரன்ட் உண்டு என்று சொல்லி வெறுப்பு ஏற்றக்கூடாது.

பெண்கள் புதிய உடையிலோ புதிய அலங்காரம் செய்து கொண்டோ வந்தால் அதை கவனித்து கருத்து சொல்ல வேண்டும். அது பாராட்டகவே இருக்கவேண்டும் கிண்டலடித்துவிட கூடாது.

மற்ற பெண்களை பார்ப்பது, வழிவது கெட்ட இமேஜை உருவாக்கிவிடும்.

பாலியல் (SEX) தொடர்பான பேச்சு நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். குறும்பான (Naughty) பேச்சு பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும் அது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது.
எதாவது தவறு செய்துவிட்டால் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவர்களிடம் எதாவது குறைகள் இருந்தால் அதை நாசூக்காக ஒரு முறை சொல்லலாம். திரும்ப திரும்ப சொல்லி வெறுப்பு ஏற்றக்கூடாது.

ஏமாற்றும் எண்ணத்துடன் பழகும் ஆண்களை பெண்கள் உள்ளுணர்வில் சுலபமாக தெரிந்து கொள்வார்கள். 

அதனால் சக மனுஷி என்கிற முறையில் உண்மையான அன்பு 1% கூட இல்லாதவர்கள் பெண்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. பெண்களை உடம்பாக மட்டும் பார்க்காமல் மனதும் உள்ள உயிராக பார்த்து அவர்களின் அன்பு மழையில் நனையுங்கள்.


Monday, 18 June 2012

SONY


அக்யோ மொரிட்டா பற்றிய தகவல் ( சோனி நிறுவனம் உருவான கதை ) ( Must Read and Share ) !!!


இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.

சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.

இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.

அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.

1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.

Sunday, 17 June 2012

ஆறு சுவை


ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!
கூடல் - 9 March, 2012
Six Tastes of Food - Food Habits and Nutrition Guide in Tamil

உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

Friday, 15 June 2012

பறவை


நடுக்கடலில் பறவைகள் இளைப்பாறுமிடம்!!!
அனைத்திற்கும் முன்னேற்பாட்டுடன்தான் 
இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளது!!

Tuesday, 5 June 2012

பாரத தேசத்தின் சில அவலங்கள்!


பாரத தேசத்தின் சில அவலங்கள்!
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

6. அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.

கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்

Sunday, 3 June 2012

LOVE


நான் இறந்தால் நீ அழாதே,.. நான் எங்கும் போகமாட்டேன்,
உன்னருகே.. உன் கண்களுக்குள்ளே தான் இருப்பேன்..
என்னை நீ எப்பொழுது வேண்டுமென்றாலும் பார்க்கலாம்..
இப்பொழுது பார்ப்பதை விட..! 

தமிழன்


மொரீசியஸ் நாட்டு ரூபாய் நோட்டில் தமிழ்
தமிழா தமிழா நாளை நம் நாடே!!!
தமிழனக்கு இந்திய மண்ணில் மட்டும் தான் மதிப்பு இல்லை...

Friday, 1 June 2012

skin cancer



ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது.

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது.

எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்

விசுவநாதன் ஆனந்த்


விசுவநாதன் ஆனந்த் 

மயிலாடுதுறை முதல் மெக்ஸிகோ வரை உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த ஒரு தமிழன் !
சதுரங்க வரலாற்றில் 
5 முறை பட்டம் வென்று 
50 முறை போட்டிகளில் வென்ற ஒரே வீரர் !

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரருக்கான உயரிய 
அர்ஜுனா விருது (1985),
ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1992) பெற்றுள்ளார் !

அதுமட்டுமல்ல இந்தியாவின் உயரிய விருதுகளான
பத்ம விபூஷன் (2007),
பத்ம பூஷன் (2000),
பத்ம ஸ்ரீ (1987)
விருதுகளைப் பெற்ற ஒரே தமிழன் !

உலக அளவில் வழங்கப்படும் செஸ் ஆஸ்கார் விருதை ஆறு முறைப் பெற்ற ஒரே வீரர் (1997,1998,2003,2004,2007,2008)

இதுமட்டுமில்லாமல் இன்னும் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் ,எண்ணற்ற கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார் என்பதில் பெருமைக் கொள்கிறோம் !

சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்ததும் ஒரு இந்தியன் !
அந்த விளையாட்டை ஆள்வதும் ஒரு இந்தியன் ! ஏன் ஒரு தமிழன் 

தமிழ்


எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

வீரத்திற்கும் , விவேகத்திற்கும் பெயர்போன நம் தமிழ் மொழி எங்கே செல்கிறது ?
தமிழராகிய நாம் தான் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் !

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்