expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): NICE WORDS
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label NICE WORDS. Show all posts
Showing posts with label NICE WORDS. Show all posts

Saturday, 25 August 2012

மெழுகு வர்த்தி!


நெருப்பு
எரித்துக் கொண்டு
இருக்கும்
மெழுகு வர்த்தி!

என்ன செய்வது
என்று தெரியாமல்
இன்னமும்
எரிந்து கொண்டு!

எண்ணையாய்
வழிந்த
கண்ணீர் முத்துக்களும்
கடைசியில் மிஞ்சவில்லை!

கம்பீரமாய் நின்ற
திரி கூட
காப்பாற்ற வில்லை
மெழுகின் நம்பிக்கையை!

கதவை திறந்ததும்
காற்று
பறந்து வந்து
நெருப்பை அணைத்தது!

கருத்த புகை
தான்
காற்றின் கருணைக்கு
கிடைத்த பரிசு!


வெற்றி தோல்வி


ஆயிரம் அம்புகள்
துளைக்கும் தோல்விகள்
தாங்கும் தேகம்
துடிக்கும் வேதனையில்

விருப்ப மரணம்
விதி என்பது
பிதாமகர் பாத்திரம்
படிப்பிக்கும் பாடம்!

வெற்றி தோல்வி
ஒருவன்
இறப்பை அறிவிக்கும்
அருகதை அற்றது!



உண்மையான அன்பு




உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க
முடியாது ...அந்த அன்புக்கு உரியவர்கள் மட்டுமே
அதை உணர முடியும் ... இதை தான் நான் எதிர்பாக்கிறன் 
என் வாழ்க்கையில்..


அன்புக்கு தகுதியானவர்




ஒருவர் மீது அளவுக்கு அதிகம் அன்பு வைக்கும் முன் அவர்கள் நம் அன்புக்கு தகுதியானவர்களா என்று தெரிந்து கொள்....
Top of Form



காசு







காசு இருந்தால் உறவுகள் 
உன்னிடம் அன்புடன் 
தேடி வரும்! 
காசு இல்லாவிட்டால் 
உன்னை பார்த்து பார்த்து
ஓடி விடும்!





நன்றி






உன்னிடம் நன்றியை தவிர எதையும்

பெற முடியாது. . !

என்னிடம் உணவை தவிர எதயும் 

தரமுடியாது. 


பெண்களின் சிரிப்பு






பெண்களின் சிரிப்பு எனும் சிறைக்குள் சிறை பட்டு கிடக்கும் ஆண்களை விட.., அவள் சொல்லும் காதல்! என்ற பொய்யான சொற்களை கேட்டு கல்லறையில் புதைந்து கிடக்கும் ஆண்களே இந்த பூமியில் அதிகம்



Wednesday, 15 August 2012

தோல்வி


நீ
இலட்சிய பாதையில்
பயணிக்கும் போது
என்னை சந்திக்காமல்
செல்ல முடியாது.

நீ
ஒவ்வொரு முறையும்
விழும் போதெல்லாம்
நான் தான் 
உன்னுடன் துணையிருந்தேன்.

நீ
சறுக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
வெற்றி உனதாக்க
உன்னை தயார்
படுத்திக் கொண்டிருந்தேன்.

உன் 
கழுத்தில்
வெற்றி மாலை 
விழும் போது
நான் பிணவறையில் இருப்பேன்.

நான் தான் தோல்வி

இறைவன்


உறவுக்குத் தலைமுழுகி
ஊருக்குக் கைகழுவி
துறவுக்குக் கால்கழுவி
தொல்லைக்கு மேல்கழுவிப்
பிறவிக்கு வினைகழுவிப்
பேருலகின் நினைப்பொழுக
இறைவன்தான் அடிதழுவி
இருப்பதற்கே வரும்,அழைப்பு


பூமி




யுத்தம் இல்லாத பூமி
மலரவேண்டும்
ஆயுதக்களஞ்சியங்கள்
பூந்தோட்டமாக மாறவேண்டும்


உறவுகள்


..வாழ்கையில் அன்பான...
...உறவுகள் கிடைப்பது...
...முக்கியம் அல்ல...
...வாழ் நாள் முழுவதும்...
...அன்பாக இருப்பதே...
...முக்கியம்...


Tuesday, 14 August 2012

வெற்றி





தோற்று விடுவோமோ என்ற பயத்தை விட ,
வென்று விடுவோம் என்ற நம்பிக்கையும் ,
அதற்கான முயற்சியின் வலியும் ,
அதிகமாக இருக்கட்டும் ! 
தோல்வியை தோற்கடிக்கும் நம்பிக்கையே ,
உன் முதல் வெற்றி ! 


கண்ணீர்



ஒரு பெண்ணால் உனக்கு இன்பம் வரும் என்றால் ...!
கண்டிப்பாக ஒரு நாள் கண்ணீரும் வரும் 


காயங்கள்



எல்லோரின் இதயத்திலும் காயங்கள் உண்டு..!
அதை வெளிபடுத்தும் விதம்தான் வித்தியாசம்..!
சிலர் கண்ணீராக..!
சிலர் புன்னகையாக..!


Thursday, 5 July 2012

அன்பு


                       
ஆசைக்கும் அன்புக்கும் அடிமை ஆகாதே நிச்சயமாக இரண்டுமே உன்னை ஒரு நாள் காயப்படுதிவிடும்

Tuesday, 26 June 2012

அன்பு


இந்த உலகில் விலை மதிப்பில்லாதது
"
அன்பு" தான்...
ஏனோ அது விலை இல்லாமல்
கிடைப்பதால் அதன் மதிப்பை யாரும்
உணர்வதில்லை 


Tuesday, 19 June 2012

சுமை

எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

Monday, 18 June 2012

வெளிச்சம் "


உலகமே இருட்டில் இருந்தாலும் உன் அன்பு எனக்கு "வெளிச்சம் "
நீ மறந்தாலும் என் நினைவுகள் என்றும் "தொடரும்
நீ வெறுக்கும் வரை அல்ல இந்த "உலகம்"
இருக்கும் வரை!!!!!!!!!!!!

நண்பன்


நண்பா நீ எனை ஒதுக்குவது ஏன்டா ?:
நீ என் உயிர் அல்லவா
நண்பனே நீ காட்டிய அன்பில்
என் தாயவளை கண்டேன்
நீ தந்த பரிவில் ,கண்டிப்பில் ,அரவணைப்பில்
என் தோழமையை உணர்ந்தேன்
ஆயினும் நண்பா நீ என்னை வெறுப்பது ஏன்?
காரணம் புரியாமல் தவிக்கிறேன்
உன் பிரிவை ஈடு செய்ய முடியாமல்
ஏன் உயிர் துடிக்கிறது நண்பா

காயம்


எவன் ஒருவன் அதிகமாக சிரிக்கிறானோ,

அவன் மனதில் சிரிப்பை விட,
ஆழமான காயம் இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்