ஒரு காலம்... காலை 8 மணிக்கே பள்ளிக்கூட வாசலில் தவமிருந்து காட்டன் புடவையில் வரும் டீச்சருக்கு குட்மார்னிங் சொல்லி கர்வப்படலாம். சாலையோரக் கடையில் நாலணா மாங்காயை நாலுபேர் பகிரலாம்.... ஒற்றைக்கால் கொலுசு தொலைந்த சோகமுகமாய் ஒவ்வொரு வகுப்பாய் ஏறி இறங்கலாம் படம் வரையும் டீச்சரின் புடவையைத் தொடுவதாய் பந்தயம் கட்டி ஜெயிக்கலாம் பரிட்சை அவசரத்தில் "இங்க்" கரையை ஆடையில் துடைத்து அம்மாவிடம் திட்டு வாங்கலாம் கைத்தட்டல்களின் நடுவே மைக்கில் பெயர்கேட்டு உடல் அதிர ஓடிச் சென்று பரிசு வாங்கலாம். ஆணென்ன! பெண்ணென்ன! அதுவொரு காலம் பட்டாம் பூச்சிகளாய் வாழ்க்கை இனிக்கின்ற பள்ளிக் காலம்...
வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.



01:21
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment