expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> இதயம் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 20 May 2012

இதயம்



நீரின் மேல் இலைவிழுந்தது போல்
இன்னும் அடங்கவில்லை - என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்...!!

உன் பிரிவினில் என் கண்களில் கரையும்
உப்புகரைசலை உன் மனதில் உள்வாங்கி கொண்டு - பிரிதலில்
உனக்கொன்றும் சலனமில்லை என்பது போல்
பிரிந்து விடுவாய் ...!!
உன்னால் காயப்பட்டு உடைந்து போனது
என் இதயம் -பின் சிதறிய
எண்ணிக்கையில்லா அவைகள் மீண்டும்
முந்தைய அளவைவிட உன்னை விரும்பசெய்து
வலியினிலும் இன்பமடைந்து - மீண்டும்
உடைவதற்கு தயாராகின்றன ...!!
எனக்கு தனிமை பிடித்திருக்கிறது - அது
உன்னுடன் மட்டும் எனும்போது !! - நீ
தாமதமாகவே வருவாய் என்றாலும் - நீ
வரும்வரை துணையாக இருந்த உன் நினைவுகளை களையும்போதுதான் உன்மீது
கோபமே வருகிறது ...!!
ஆனால் சமிபகாலமாக
உன்னை எதிர்பார்த்த என் கண்களுக்கு
ஏமாற்றத்தையே தருகிறாய் ...!!
என் கால்களிடம் கேட்டுபார் - உனக்காக
காத்திருந்த தருணங்களில் என் கால்களின் வலியை எப்படி கரைத்தேன் என்று அழகிய
கவியாக சொல்லும் !!
- நான் எழுதி அனுப்பிய
கவிதைகள் யாவும் திருட பட்டவையே !!
- அது
உன்னிடமிருந்து மட்டும் ...

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்