Showing posts with label அம்மா.. Show all posts
Showing posts with label அம்மா.. Show all posts
Sunday, 26 August 2012
Saturday, 25 August 2012
Tuesday, 14 August 2012
Friday, 15 June 2012
Sunday, 3 June 2012
Friday, 1 June 2012
அம்மா
கல்லூரியில் தேர்வாகிய செய்தி வந்ததும்
கண்களில் ஆனந்தக்கண்ணீர் தந்தைக்கு..
கைபிடித்து வாழ்த்து மட்டும் ஏன் அம்மா
கலக்கத்தோடு மகனின் கேள்வி எனக்கு....
பெருமை இல்லையா அப்பாவைப்போல்.?
பொறுமை இழந்து பாவமாய் என் பதிலுக்கு..
பெற்றவளுக்கில்லாத மகிழ்ச்சியாடா மகனே,
போகவேண்டிய பயணம் அதிகமிருக்கு ..
இதுவரை கிடைத்ததெல்லாம் உன் அதிர்ஷ்டமே
இனி உன் பயணத்தில் புரியும் மீதி கஷ்டமே..
இரு கைபிடித்து காட்டியபாதை போதும்..
இருள் நீங்க விழிக்கணும் சுய புத்தி கொண்டு நீயும்..
பெருமைப்படுவேனடா ஓர்நாள் உன்னால்
எதையும் எதிர்பாராது நீ இவ்வுலகுக்கு மன
மகிழ்வோடு செய்திடும் நிலை வருகையில்..
மகன் புரிந்தான் வாழ்வின் உண்மை மகிழ்வை என மனம் மகிழ்வேன் அன்றே நானும் உன்னுடன்....
அதுவரை உன் வெற்றிகள் , முயற்சிகள் என்னை
அமைதியாய் மனம் திருப்தி கொள்ளமட்டுமே செய்யும்.
கீழே விழவோ , தோல்விக்கோ பயப்படாதே , அதில்
கீர்த்திக்கான வழியிருக்கும் துணிவாய் கற்றுக்கொள்..
நிச்சயம் செய்வேன் அம்மா உம் விருப்பப்படி என்றாய்
போதுமடா நான் மரணிப்பேன் இனி இவ்வார்த்தையில்..
சாதாரண வாழ்வு என்போல் வேண்டாமடா உனக்கு
சாதனை வாழ்க்கை வாழ நான் இருக்கேன் துணைக்கு.
பிரசவ வேதனை முடிந்தது நேற்று..
பிறந்தாய் மீண்டும் ஒருமுறை இன்று..

வருகைக்கு மிக்க நன்றி
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

01:10
ASWIN GEORGE

.jpg)