expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> பருவ மழை ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 22 May 2012

பருவ மழை



பருவ மழை பெய்யலேனா என்ன? 

நீராதாரம் குறைந்த தன் கிராமத்தில், சலைன் பாட்டில்கள் துணையுடன், நவீன முறையில் விவசாயம் செய்யும் சந்திரசேகர்: சித்தூரிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் வருவது கோலார். பரவலாக வறண்ட, காய்ந்து போன நிலங்கள். வறட்சியான பகுதி தான் எங்கள் ஊர். இங்கு எங்களுக்கு 20 ஏக்கர் சொந்தமாக நிலம் உள்ளது. பரம்பரையாக பயிர் செய்வது ஒன்று தான் எங்கள் குடும்பத்திற்கு தெரியும். 

ஓரிரு முறை பெய்யும் பருவ மழை, போர்வெல் என்று சமாளித்துப் பயிர் செய்தோம். ஆனால், 2007க்குப் பின், பருவ மழையும் இல்லை; போர்வெல் போட்டும் நிலத்தடி நீர் இல்லாததால் பயன் இல்லாமலும் போய்விட்டது. எனவே, ஒரே பயிரையே நம்பியிருக்காமல், ஆண்டில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மகசூல் வரும்படி மாற்றுப் பயிர் செய்தோம். மொத்த நிலத்திலும் பயிர் செய்யாமல் இப்போதைக்கு 10 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்கிறோம். தண்ணீர் பிரச்னை இல்லாமல் இருக்க, கோலார் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று, பயன்படுத்தப்பட்ட சலைன் பாட்டில்களை வாங்கினேன். 

அதில் நீர் ஊற்றி, செடிகளின் வேர்ப் பக்கத்தில் வைத்து விட்டேன். நேரடியாக வேருக்கு சொட்டு சொட்டாக நீர் போகும். இந்த சொட்டு நீர் பாசனத்தால் வழக்கமாக ஒரு செடிக்கு பாய்ச்சும் நீரில் மூன்றில் ஒரு பங்கு நீர் போதுமானதாக இருந்தது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாட்டில்களில் நீர் நிரப்பினால் போதும். பயிர் இல்லாத இடத்தில் ஆங்காங்கே, குழிகளை வெட்டி வைத்துள்ளோம். எப்போதாவது மழை பெய்தால், அந்த நீர் வீணாகாமல் அப்படியே நிலத்தில் தங்கிவிடும். 

அதேபோல், நிலத்தின் ஓரத்தில் ஒரு சிறிய குட்டை போல் வெட்டி வைத்துள்ளோம். எந்தப் பக்கத்தில் இருந்து நீர் வந்தாலும் ஒரு சொட்டு கூட வீணாகாமல், அப்படியே நிலத்தில் சேமிக்கப்படும். எப்போதாவது தான் மழை பெய்கிறது. அப்படி கிடைக்கும் நீரையும் வீணாக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்