எண்பதிலும் ஒவிய ஆர்வம் குறையாத அண்ணாபிள்ளை
இன்றைய தேதிக்கு எண்பது வயதை தொடும் ஒருவர் தனது தள்ளாமை காரணமாக தன்னைத்தானே பார்த்துக்கொள்வதும்,பராமரி த்துக் கொள்வதுமே சிரமம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருபது வயது இளைஞரைப்போல ஒருவர் ஒவியக் கலைக்காக ஒடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறார். அவர்தான் பா.ர.அண்ணாப்பிள்ளை. கல்விக்காகவும்,மொழிக்காகவு ம், நாட்டு நலனுக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும், கலை கலாச்சார வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்கள், பாடுபட்டு வருபவர்கள் பலருண்டு. அவர்களைப் போல ஒவியக்கலைக்காக பாடுபட்டு வருபவர்தான் இவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவர், சிறுவயதிலேயே ஒவியத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஒவியம் படித்து, ஒவிய ஆசிரியராக சேர்ந்து, ஒவிய ஆசிரியராகவே பணி நிறைவு செய்தவர், தற்போது சென்னையில் வசித்து வருபவர். பணியில்தான் ஒய்வு பெற்றோரே தவிர ஒவியத்திற்கு ஒய்வு கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒய்வு பெற்ற பிறகுதான் ஒவியக்கலைக்காக நிறைய சேவை செய்துள்ளார். கணக்கிலடங்கா இளைஞர்களுக்கு இலவசமாக ஒவிய பயிற்சி வழங்கி சிறந்த ஒவியராக்கியுள்ளார்.
தாம்பரம் அடுத்த படைப்பையில் ஒவியர்களுக்காக பல்லவா ஒவிய கிராமம் ஒன்றை உருவாக்கியவர். தேசிய லலித் கலா அகாடமியின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் ஒவிய கண்காட்சி நடத்தி பலர் வெளிச்சத்திற்கு வர காரணமாக இருந்தவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். கார்கில் போர் நிவாரண நிதிக்காகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டி தரவும் இவர் நடத்திய ஒவிய கண்காட்சிகள் காரணமாக ஒவியர்களின் புகழ் உயர காரணமாக இருந்தவர்.
வினாயகர், மிருகங்கள், இயற்கை காட்சிகளை தைல வண்ணத்தில் வரைவதில் இவர் தனித்தன்மை பெற்றவர். இதன் காரணமாக நிறைய தனிக்கண்காட்சி நடத்தியவர். பொது இடங்களில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து புது ஒவியர்களை ஊக்கப்படுத்திவரும் அண்ணாப்பிள்ளையிடம் பேச விரும்புபவர்களுக்கும், தங்களது ஒவியங்களை கண்காட்சியாக வைக்க விரும்புவர்களும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9941322175. (போன் எடுக்க தாமதமாகலாம், சத்தம்போட்டு பேசவேண்டி வரலாம், ஆகவே போன் செய்வதற்கு முன் எண்பது வயது பெரியவரிடம் பேசுகிறோம் என்பதை எண்ணிக்கொண்டு பேசவும்)
- எல்.முருகராஜ்
இன்றைய தேதிக்கு எண்பது வயதை தொடும் ஒருவர் தனது தள்ளாமை காரணமாக தன்னைத்தானே பார்த்துக்கொள்வதும்,பராமரி

21:01
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment