expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> மெட்ரோ ரயில் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 22 May 2012

மெட்ரோ ரயில்



மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி துவங்கியது....


மெட்ரோ ரயில் பாதையில், தண்டவாளம் அமைக்கும் பணி துவங்கியது. சென்னை வண்ணாரப்பேட்டை-விமான நிலையம், சென்ட்ரல்-கோயம்பேடு இடையே இருவழித் தடங்களில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 449.23 கோடி ரூபாய் செலவில், இரண்டு வழித்தடங்கள் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில்வே யார்டில் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு-பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது பாலம் அமைக்கப்பட்டு, பாலத்தின் மீது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 

கோயம்பேடு-வடபழனி மெட்ரோ ரயில் மேம்பால பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அசோக் பில்லர்-ஆலந்தூர்-பரங்கிமலைஇடையே ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது 6 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. வடபழனியில், இப்பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. 56.5 அங்குல இடைவெளியில் தண்டவாளம் அமைக்கும் பணி ஆரம்பமானது. 4 கி.மீ., தூரத்திற்கு தேவையான தண்டவாளங்கள், ஆங்காங்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

நவீன பெட்டிகள் : மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான ரயில் பெட்டிகள், இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து, 1,471 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் மூலம், ஒரு ரயிலுக்கு நான்கு பெட்டிகள் வீதம் 42 ரயில்களுக்கு மொத்தம், 168 பெட்டிகள் வாங்கப்படுகின்றன. இந்த ரயில்களின் சோதனை ஓட்டம், இயக்கம் தொடர்பான பயிற்சியையும், பெட்டிகளை பராமரிப்பதற்கு தேவையான உதிரி பாகங்களையும், சிறப்பு கருவிகளையும், இந்நிறுவனங்களே வழங்க உள்ளன. இந்த பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டதாகவும், துரு பிடிக்காமலிருக்க, "ஸ்டெயின்லஸ் ஸ்டீல்' கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. தானியங்கி ரயில் இயக்கம், தானியங்கி ரயில் பாதுகாப்பு மற்றும் தானியங்கி கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பயணத்தில், அடுத்து வரும் ரயில் நிலையங்களின் பெயர் மின்னணு திரையில் பார்க்கும் வசதி, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு, அவசரகால எச்சரிக்கை, கண்காணிப்பு கேமரா மற்றும் மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் நிறுத்தி வைப்பதற்கும், தனி இடம் இருக்கும். பயணிகள் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு செல்ல, விசாலமான இணைக்கும் பாதை இருக்கும். இப்பெட்டிகள், 25 கே.வி., மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. மூன்று நிமிட இடைவெளியில் இயக்கப்படும் இந்த ரயில்களில், ஒவ்வொரு ரயிலும், 1,276 பேர் வரை பயணம் செய்யலாம்.

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்